இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை தொடக்கம்: அலைமோதும் கூட்டம்

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை ஐபோன் 16 சீரிஸில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை தொடக்கம்: அலைமோதும் கூட்டம்
1 min read

இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதியுள்ளது.

ஐபோன் 16 (128 ஜிபி), ஐபோன் 16 பிளஸ் (128 ஜிபி), ஐபோன் 16 ப்ரோ (128 ஜிபி), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி) என நான்கு மாடல்களை ஐபோன் 16 சீரிஸில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 சீரிஸ் விற்பனையாகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே மும்பை மற்றும் தில்லியில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கி வருகின்றனர்.

ஐபோன் 16 சீரிஸின் சிறப்பு அம்சங்கள்

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் டிஸ்ப்ளே இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 16 ப்ரோவின் அளவு 6.3 இஞ்ச். ப்ரோ மேக்ஸ் அளவு 6.9 இஞ்ச். ஐபோன் பேட்டரிகளில் சிறந்த பேட்டரி ஆயுள் உடையதாக இருக்கும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

16 ப்ரோ ஏ18 ப்ரோ சிப்பால் இயங்குகிறது. இது முந்தைய ஐபோன்களை காட்டிலும் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மை கொண்டது. இந்த புதிய ஜிபியு முந்தைய தலைமுறையைக் காட்டிலும் 20 சதவீதம் வேகமாக இயங்கக்கூடியது.

ஐபோன் 16 ப்ரோவில் முன்பக்க விடியோவில் 4K120 மூலம் படம்பிடிக்கலாம். இதில் ஸ்பேஷியல் ஆடியோ கேப்ச்சர் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in