22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு நன்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வரலாறு காணாத அளவுக்குத் தங்கத்தின் விலை தற்போது உயர்ந்து, ஒரு கிராம் ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ. 56,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 7000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அமெரிக்காவில் கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், முதலீடுகள் தங்கத்தை நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பாண்டில் இதுவரை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 10000 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 46,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.