இரு நாள்களில் ஆயிரம் ரூபாய் குறைந்த தங்கம் விலை!

சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 55480-க்கு விற்பனையாகிறது.
இரு நாள்களில் ஆயிரம் ரூபாய் குறைந்த தங்கம் விலை!
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துக் கொண்டே வருகிறது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் மதிப்பு நன்கு உயர்ந்திருந்தது. கடந்த தீபாவளியன்று அக்டோபர் 31-ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,455 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் ஒரு சவரன் தங்க விலை ரூ. 60 ஆயிரத்தை நெருங்கியது.

கடந்த நவ 12 அன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து ஒரு சவரன் ரூ. 56680-க்கு விற்பனையானது.

நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு 40 ரூபாயும், சவரனுக்கு 320 ரூபாயும் குறைந்து, தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 56360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 7045-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 55480-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 6935-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் ரூ. 2,720-ம் கடந்த இரு நாள்களில் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in