தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் வரலாறு காணாத அளவில் ரூ. 76,960-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 9,620-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை அண்மை நாள்களாகவே கடுமையாக உயர்வைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக 2025 தொடங்கியதிலிருந்து தங்கம் விலை அவ்வப்போது புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50% வரி விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாறு காணாத அளவுக்கு ரூ. 88.09 ஆக சரிவைச் சந்தித்தது.
இது தங்கத்தின் விலையிலும் எதிரொலித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 1,040 உயர்ந்தது. சனிக்கிழமை காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 680 உயர்ந்துள்ளது. இதன்மூலம், கடந்த இரு நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,720 உயர்ந்துள்ளது.
ஜனவரி 1, 2025-ல் ரூ. 57,200-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் விலை, பிப்ரவரியில் 60 ஆயிரத்தைத் தாண்டியது. ஏப்ரலில் 70 ஆயிரத்தைத் தாண்டி ஜூலையில் ரூ. 75 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
இன்று ரூ. 680 உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ. 77 ஆயிரத்தை நெருங்கி ரூ. 76,960-க்கு விற்பனையாகிறது.
Gold Rate | Gold Price | Gold Price Hike | US Dollar | US Tax | US Tarriff | 50% Tariff |