புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!

இன்று கிராமுக்கு 90 ரூபாயும், சவரனுக்கு 720 ரூபாயும் அதிகரித்துள்ளது.
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!ANI
1 min read

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 அதிகரித்த நிலையில் கிராம் ஒன்று ரூ. 6920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு நன்கு உயர்ந்து வருகிறது. கடந்த மே 20 அன்று மிக அதிகமாக ஒரு சவரன் 55,200 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் வரலாறு காணாத அளவுக்குத் தங்கத்தின் விலை தற்போது உயர்ந்து ஒரு கிராமுக்கு ஏழாயிரம் ரூபாயை நெருங்கி வந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 அதிகரித்துள்ளது. எனவே ஒரு சவரன் ரூ. 55360-க்கு விற்பனையாகிறது.

ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1120 அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 6830-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 90 ரூபாயும், சவரனுக்கு 720 ரூபாயும் அதிகரித்து தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 55360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் குறைந்ததும் இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை 1% குறைந்ததும் அமெரிக்க ஃபெடரல் வங்கி, கடன் வட்டி விகிதங்களை செப்டம்பரில் குறைக்கவுள்ளதாக வெளியான செய்திகளும் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in