ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியைப் பின்னுக்கு தள்ளிய அதானி!

அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து....
கவுதம் அதானி
கவுதம் அதானிANI

முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கெளதம் அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் எனும் புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார் கெளதம் அதானி. முன்னதாக, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில் அவர் பின்னுக்கு தள்ளப்பட்டார். அதேபோல உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் முறையே 11 மற்றும் 12-வது இடத்தில் உள்ளனர்.

முன்னதாக, அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்ட அதானி குழுமம், பணக்காரப் பட்டியலில் சரிவைக் கண்டது. இந்நிலையில் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து, தற்போது மீண்டும் பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in