பட்ஜெட் எதிரொலி: தங்கத்தின் விலை சரிவு

யாரும் எதிர்பாராவிதமாக கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 3,040 ரூபாய் குறைந்துள்ளது
பட்ஜெட் எதிரொலி: தங்கத்தின் விலை சரிவு
1 min read

மத்திய பட்ஜெட் அறிவிப்பால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவைச் சந்தித்து வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கடந்த ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அவர் அறிவித்தார். இதனால் கடந்த மூன்று நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று (ஜூலை 24) ரூ. 51,920-க்கு விற்கப்பட்ட 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 480 குறைந்து, இன்று ரூ. 51,440-க்கு விற்கப்படுகிறது. மேலும் நேற்று ரூ. 6,490-க்கு விற்கப்பட்ட 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 60 ரூபாய் குறைந்து, இன்று ரூ. 6,430்-க்கு விற்கப்படுகிறது.

மேலும் நேற்று ரூ. 92,000 ஆக இருந்தது 1 கிலோ வெள்ளியின் விலை. இந்நிலையில் இன்று ரூ. 3,000 குறைந்து, 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 89,000 ஆக உள்ளது.

இதனால் யாரும் எதிர்பாராவிதமாக கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 3,040 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது போல, தங்க நகை விற்பனை அதிகரிக்கும் என்று நகை விற்பனையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in