அமெரிக்காவில் முதலீடு செய்கிறது அதானி குழுமம்!

வேலைவாய்ப்புகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அதிபர் ஜோ பைடன் நடைமுறைப்படுத்திய திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
அமெரிக்காவில் முதலீடு செய்கிறது அதானி குழுமம்!
https://x.com/gautam_adani
1 min read

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் தேர்வாகியதைத் தொடர்ந்து, சுமார் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான முதலீட்டை அமெரிக்காவில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20-ல் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதை அடுத்து நேற்று (நவ.13) தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் தொழிலதிபரும், அதானி குழும நிறுவனருமான கௌதம் அதானி பதிவிட்டவை பின்வருமாறு,

`டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவுகள் ஆழமாகியிருக்கும் இந்த நேரத்தில், 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மீள் கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவு செய்துள்ளது’ என்றார்.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீட்டின் மதிப்பு குறித்து அறிவித்துள்ள கௌதம் அதானி, எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது என்பது குறித்தும், முதலீட்டுக்கான கால அளவு குறித்தும் எந்த ஒரு விவரத்தையும் வெளியிடவில்லை.

வேலைவாய்ப்புகள் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் நடைமுறைப்படுத்திய திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம், புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை வைத்துள்ள நேரத்தில், கௌதம் அதானியின் இந்த அறிவிப்பு கவனம் பெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in