Breaking News

எமோஜிக்களைப் பயன்படுத்த சிரமப்படும் முதியோர்கள்!

எமோஜிக்களைப் பயன்படுத்த சிரமப்படும் முதியோர்கள்!

வெவ்வேறு தலைமுறையினர் தங்கள் தகவல்தொடர்புகளில் எமோஜிக்களின் பயன்பாட்டை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
Published on: 

ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் ஒரு புதிய ஆய்வு, வெவ்வேறு தலைமுறையினர் தங்கள் தகவல்தொடர்புகளில் எமோஜிக்களின் பயன்பாட்டை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

வயதானவர்கள் எமோஜிக்களைக் குறைவாகப் பயன்படுத்துவதுடன் அவற்றைப் புரிந்துகொள்வதில் சிரம்ப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆச்சரியத்தைக் குறிக்கும் எமோஜி - சிறிய மஞ்சள் முகம் கண்களை அகலமாகத் திறந்து, புருவங்களை உயர்த்தியபடி பேசாமல் இருக்கும் கிராஃபிக் - வயதானவர்களிடம் விளக்குவதற்கு மிகவும் கடினமான எமோஜியாக உள்ளது.

மென்பொருள் வல்லுநர்கள் தற்போதுள்ள எமோஜிக்களின் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயதானவர்கள் எளிதில் புரிந்துகொண்டு, எளிதில் தகவலைப் பரிமாறக் கூடிய எமோஜிக்களை உருவாக்க வேண்டும் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in