நிலவில் அணு உலை: திட்டமிடும் சீனா, ரஷ்யா

நிலவில் அணு உலை: திட்டமிடும் சீனா, ரஷ்யா

நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் பரிசீலித்து வருவதாக...

நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் பரிசீலித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி அமைப்பின் தலைமை ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

உலக இளையோர் விழாவில் ராஸ்காஸ்மோஸ் தலைமைச் செயல் அதிகாரி யூரி போரிசோவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

"2033-2035-ல் சந்திரனில் சீனாவுடன் இணைந்து ஒரு அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு ஒரு திட்டத்தை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்," என்றார்.

மார்ச் 2021-ல், ராஸ்காஸ்மோஸ் நிறுவனமும் சீன தேசிய விண்வெளி நிர்வாகமும் (சி.என்.எஸ்.ஏ.) இணைந்து சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்தை (ஐ.எல்.ஆர்.எஸ்) அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in