Breaking News

சீன கார்களால் பாதுகாப்புக்கு ஆபத்தா?: விசாரணைக்கு பைடன் உத்தரவு

சீன கார்களால் பாதுகாப்புக்கு ஆபத்தா?: விசாரணைக்கு பைடன் உத்தரவு

சீனாவில் தயாரிக்கப்படும் கார்களின் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க நிதித்துறை செயலாளருக்கு...
Published on: 

சீனாவில் தயாரிக்கப்படும் கார்களின் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க நிதித்துறை செயலாளருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், பைடன், "சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க சாலைகளில் ஓடும் கார்கள், நம் தேசிய பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிட வைக்காது என்பதை உறுதிப்படுத்த முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகளை அறிவிக்கிறேன். சம்பந்தப்பட்ட நாடுகளின் வாகனங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும் அதிலுள்ள அபாயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் என் நிதித்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நியாயமற்ற வழிவகைகளைப் பயன்படுத்துவது உள்பட, வருங்காலத்தில் வாகனச் சந்தையில் சீனா மேலாதிக்கம் செலுத்தவுள்ளது என்றும் பைடன் குறிப்பிட்டார். சீனாவின் கொள்கைகள் அமெரிக்காவின் சந்தையை அதன் வாகனங்கள் வழியாக ஆதிக்கம் செலுத்தக்கூடும், இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.

இன்றைய கார்கள், செல்பேசிகளால் இணைக்கப்பட்டவை. சீன வாகனங்கள், அமெரிக்கர்களின் முக்கியமான தகவல்களைச் சேகரித்து, அதை சீனாவுக்கு அனுப்ப வாய்ப்புண்டு. அந்த வாகனங்களைத் தொலைவிலிருந்து இயக்க முடியும் அல்லது முடக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in