பாகிஸ்தான் இரட்டைக் குண்டு வெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தானில் நடைபெற்ற இரட்டைக் குண்டு வெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

பாகிஸ்தானில் நடைபெற்ற இரட்டைக் குண்டு வெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் இன்று (பிப். 08) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் புதன் அன்று நடைபெற்ற இரட்டைக் குண்டு வெடிப்பால் 28 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளார்கள்.

பாகிஸ்தானின் இயற்கை வளம் மிக்க, பாகிஸ்தானின் பெரிய ஆனாலும் வறுமையான பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏராளமான வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை தேர்தல் வேட்பாளரின் அலுவலகம் அருகே குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதில் 16 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தார்கள்.

மேலும் இதே மாகாணத்தில் கிலா சைபுல்லா நகரில் நடைபெற்ற மற்றொரு குண்டு வெடிப்பில் ஜேயுஐ-எஃப் கட்சி அலுவலகத்துக்கு வெளியே குண்டு வெடித்தது. இதில் 12 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தார்கள். இந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் மொத்தமாக 28 பேர் பலியாகி, 45 பேர் காயமடைந்துள்ளார்கள்.

இந்த இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பைக்கில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கொண்டுசெல்லப்பட்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறியுள்ளது.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்படாது, திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in