அமெரிக்காவின் சிறந்த அதிபர் டிரம்ப்: வழிவிட்ட விவேக் ராமசாமி புகழாரம்!

அயோவா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் விவேக் ராமசாமிக்கு 4-வது இடமே கிடைத்திருப்பதால், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அவர் வெளியேறியிருக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

அயோவா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் எதிராகப் போனதால், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விவேக் ராமசாமி விலகியிருக்கிறார். தனது போட்டியாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

38 வயது நிரம்பிய இந்திய-அமெரிக்கத் தொழிலதிபரான விவேக் ராமசாமி, நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் டாப்-3 இடத்தில் இருந்தார். நேற்றிரவு அயோவா காகஸ் மாநிலத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அடுத்த அதிபராக வருவதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தன்னுடைய ஆதரவை டொனால்ட் டிரம்ப்பிற்குத் தருவதாக அறிவித்துள்ளார்.

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த அதிபர் என்று டொனால்ட் டிரம்பை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள விவேக் ராமசாமி, அடுத்த அமெரிக்க அதிபராக டிரம்ப் திரும்பவும் வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்காவை நேசிக்கக் கூடிய ஒரு தேச பக்தரை பதவியில் அமர்த்தவேண்டும். அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன் என்று வாக்குறுதியும் தந்திருக்கிறார்.

விவேக் ராமசாமிக்குக் கிடைத்த பின்னடைவு அவரது ஆதரவாளர்களைக் குறிப்பாக இந்திய வம்சாவளியினரை வருத்தப்பட வைத்திருக்கிறது. அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக இது முடிவல்ல, நல்லதொரு தொடக்கம். நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றாக செயல்படுவோம் என்றெல்லாம் விவேக் பதிவிட்டாலும் அவரது ஆதரவாளர்களை தேற்ற முடியவில்லை.

அயோவாவில் நடந்த குடியரசுக் கட்சிக்கான முதல் அதிபர் போட்டியில் ஏறக்குறைய 51 சதவிகத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். விவேக் ராமசாமிக்கு நான்காவது இடமே கிடைத்தது. பிற போட்டியாளர்களால் 22 சதவிகத வாக்குகளைக் கூட பெற முடியவில்லை. இது டிரம்ப் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது.

பெருகி வரும் ஆதரவால் டிரம்ப் மகிழ்ச்சியோடு இருக்கிறார். தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதியிருக்கிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் ஜோ பைடனும் மீண்டும் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒருவேளை ஜோ பைடன் போட்டியிட்டால் டொனால் டிரம்ப் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்கிறார்கள், அரசியல் விமர்சர்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in