உலகின் புத்திசாலித்தனமான மாணவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி: யார் இவர்?

உலகின் புத்திசாலித்தனமான மாணவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி: யார் இவர்?
படம்: https://twitter.com/DDNewslive

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் 3-ம் வகுப்பு பயிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீஷா சக்ரபோர்டி, உலகின் புத்திசாலித்தனமான மாணவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

திறமையான இளைஞர்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம் உலகின் புத்திசாலித்தனமான இளைஞர்கள் யார் என்பதைத் தேர்வுகள் மூலம் கண்டறிந்து பட்டியலிடுகிறது. 90 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனறித் தேர்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பள்ளி மற்றும் கல்வி மதிப்பீட்டுத் தேர்வு, அமெரிக்க கல்லூரி தேர்வு, பள்ளி மற்றும் கல்லூரி திறனறித் தேர்வு உள்ளிட்டவற்றில் பிரீஷா சிறப்பாக செயல்பட்டுள்ளார். வாய்மொழித் தேர்வு மற்றும் ஆய்வுப் பிரிவுகளில் 5-ம் நிலை வகுப்பின் திறன்களுக்கு நிகராக 99 சதவிகிதம் பெற்றுள்ளார். மேலும் கிராண்ட் ஹானர்ஸையும் இவர் கைப்பற்றியுள்ளார்.

திறமையான இளைஞர்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தினுடைய இணையம் மற்றும் பயிற்சிக்கூட வளாகங்களில் 2 முதல் 12 வரையிலான மேம்பட்ட மாணவர்களுக்கு கணிதம், கணிணி, வேதியியல், இயற்பியல், வாசிப்பு மற்றும் எழுத்து ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும் 250-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்குத் தகுதி வாய்ந்த சாதனை இது.

மேலும், பிரபஞ்சப் புகழ்பெற்ற மென்சா அறக்கட்டளையின் வாழ்நாள் உறுப்பினராகவும் பிரீஷா உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in