கணித்தமிழ் மாநாடு: யூடியூபில் நேரலை ஒளிபரப்பு

பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024, சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
கணித்தமிழ் மாநாடு: யூடியூபில் நேரலை ஒளிபரப்பு
1 min read

பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024, சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நாளையுடன் முடிவடைகிறது.

நேற்று, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இணையம், கணினி, கணித்தமிழ், செயற்கை நுண்ணறிவு போன்ற நுட்பங்களில் ஆர்வமுள்ளவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு வருகிறார்கள். இன்றும் நாளையும் நிபுணர்களின் அமர்வுகள் நடைபெறுகின்றன.

கணித்தமிழ் மாநாட்டின் அமர்வுகள், யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.

logo
Kizhakku News
kizhakkunews.in