சென்னை மேயர் கார் விபத்து: காயமின்றி தப்பிய மேயர் பிரியா!

காயமின்றி தப்பித்த மேயர் பிரியா மாற்று கார் மூலம் சென்னைக்குப் புறப்பட்டார்.
சென்னை மேயர் கார் விபத்து: காயமின்றி தப்பிய மேயர் பிரியா!
படம்: https://twitter.com/PriyarajanDMK

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் கார் சென்னை அருகே விபத்துக்குள்ளானது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். பூந்தமல்லி பகுதிக்கு முன்பு கார் வந்துகொண்டிருந்தபோது, முன்பு சென்றிருந்த கார் மீது மேயர் பிரியாவின் கார் எதிர்பாராத விதமாக மோதியது. மேயர் பிரியாவின் கார் பின்னால் வந்துகொண்டிருந்த லாரியும் கட்டுப்பாட்டை இழந்து மேயர் காரின் பின்பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் மேயர் பிரியாவின் கார் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வித காயமின்றி தப்பித்த மேயர் பிரியா மாற்று கார் மூலம் சென்னைக்குப் புறப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in