சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையை, பேரவைத் தலைவர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என். ரவி பிப்ரவரி 12-ம் தேதிக்கு கூட்டினார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுவதுமாக வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி உரையைப் புறக்கணித்தார். எனினும், அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டது, உரையில் தனக்கு முரண்பாடு இருப்பதாகக் கூறி ஆளுநர் உரையைப் புறக்கணிக்க, சட்டப்பேரவைத் தலைவர் ஆளுநருக்கு எதிராகக் கருத்துகளைக் கூறினார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பு ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 19-ல் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவைில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 20-ல் வேளாண் துறை மற்றும் உழவர் நலத் துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர்கள் இன்று பதிலளித்தார்கள்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையைப் பேரவைத் தலைவர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in