கோவையில் நடைபெற்ற ஜெயமோகன் மகன் அஜிதன் திருமணம்

கோவையைச் சேர்ந்த தன்யாவை அஜிதன் காதலித்து வந்த நிலையில், இருவரின் திருமணம் கோவையில் இன்று நடைபெற்றது.
கோவையில் நடைபெற்ற ஜெயமோகன் மகன் அஜிதன் திருமணம்
படம்: https://www.facebook.com/pon.mahalingam
1 min read

பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமணம் கோவையில் இன்று நடைபெற்றது.

இயக்குநர் மணி ரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வரும் அஜிதன் - மைத்ரி, மருபூமி, அல் கிஸா நூல்களை எழுதியுள்ளார். கோவையைச் சேர்ந்த தன்யாவை அஜிதன் காதலித்து வந்த நிலையில், இருவரின் திருமணம் கோவையில் இன்று நடைபெற்றது. தன்யா பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஐயப்பன் பூஜா சங்கத்தில் மாலை 9.30 மணி முதல் இரவு 9.30 வரை திருமண வரவேற்பு நடைபெற்றது.

இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் உறவினர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 21 அன்று நாகர்கோயிலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in