இன்னும் 2 நாள்களில் நல்ல செய்தி: கமல்ஹாசன்

"தக் லைஃப் படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் இரு நாள்களில் அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசினார்.

"தக் லைஃப் படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். இன்னும் இரு நாள்களில் நல்ல செய்தியுடன் உங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அனைவருடனும் கலந்துரையாடிவிட்டு உங்களைச் சந்திக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் நன்றாக நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து இரு நாள்களில் சொல்கிறேன். தற்போது எதையும் கூற முடியாது" என்றார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி செய்யவில்லை.

மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க விழா கமல்ஹாசன் முன்னிலையில் வரும் 21-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்கைக் குழு உறுப்பினர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளுமாறு கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in