தமிழக வெற்றிக் கழகம்: கட்சிப் பெயரிலிருந்த பிழை திருத்தம்
படம்: https://www.instagram.com/actorvijay/

தமிழக வெற்றிக் கழகம்: கட்சிப் பெயரிலிருந்த பிழை திருத்தம்

அரசியல் வருகை பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில், கட்சிப் பெயரிலிருந்த இலக்கணப் பிழையும் ஒருபுறம் பெரிதும் பேசப்ப்டடது.
Published on

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சிப் பெயரிலிருந்த இலக்கணப் பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாக கடந்த 2-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில், கட்சிப் பெயரிலிருந்த இலக்கணப் பிழையும் ஒருபுறம் பெரிதும் பேசப்ப்டடது. தமிழக வெற்றி கழகம் என்று தொடக்கத்தில் கட்சிப் பெயர் இருந்தது. இந்த விமர்சனங்களை கருத்தில்கொண்டு கட்சிப் பெயரில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், கட்சியின் தலைமை நிலையச் செயலகத்திலிருந்து இன்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிக்கையில் விஜய்யின் கட்சிப் பெயர் தமிழக வெற்றி கழகம் என்பதிலிருந்து தமிழக வெற்றிக் கழகம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது உறுதியானது.

கட்சித் தலைவர் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ளதாக தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in