தமிழ்நாடு தேசியத்தின் பக்கமே உள்ளது: ஜெ.பி. நட்டா

திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.
தமிழ்நாடு தேசியத்தின் பக்கமே உள்ளது: ஜெ.பி. நட்டா

திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.

சென்னைக்கு இன்று வந்த ஜே.பி. நட்டாவுக்கு விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட அக்கட்சி நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு அளித்தார்கள். இன்றோடு நிறைவடைந்த, அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் நட்டா பங்கேற்றார். பிறகு தங்கச் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது:

நான் வரும்போது கடைகள் மூடப்பட்டிருந்தன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். இது எமர்ஜென்சியை நினைவுபடுத்தியது. இது ஜனநாயகமா, இதுதான் தமிழ்க் கலாசாரமா? இல்லை எனில் இதை முன்னிறுத்தும் ஸ்டாலின் ஆட்சியில் இருக்கக் கூடாது. ஸ்டாலின் வெளியேறும் காலம் நீண்ட நாள் இல்லை.

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனால் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னாவை அறிவித்து கெளரவப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒரே பாரதம், முன்னேறும் பாரதம் என்கிற முழக்கத்தைப் பிரதமர் மோடி முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார். ஊழலற்ற வெளிப்படையான, மக்களுக்கான அரசாங்கத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளோம். இனிமேல் இந்த நாட்டில் யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ, அந்த ஊழல்வாதிகளை மக்கள் தூக்கி எறிகிற காலம் வெகுதொலைவில் இல்லை.

பட்ஜெட்டில் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பாஜக அரசின் 10 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். தமிழ்நாடு தேசியத்தின் பக்கமே உள்ளது. அதை உரக்கச் சொல்ல 60 நாள்களே உள்ளன. வரும் தேர்தலில் மோடியை 3-வது முறையாகப் பிரதமராக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in