சென்னையில் கணித்தமிழ் மாநாடு

இந்த மாநாடானது உரைகள் மற்றும் விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நிரலாக்கப் போட்டி, கண்காட்சி ஆகிய அம்சங்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது.
கணித்தமிழ் மாநாடு
2024
கணித்தமிழ் மாநாடு 2024kanitamil.in

பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024, சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்குகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இணையம், கணினி, கணித்தமிழ், செயற்கை நுண்ணறிவு போன்ற நுட்பங்களில் ஆர்வமுள்ளவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள முடியும். இன்று தொடக்க விழா நடைபெறும். நாளை முதல் அடுத்த இரு நாள்களுக்கு நிபுணர்களின் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

“ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் NLPT, AI, ML, MT, SA போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியும், வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழுக்கான இடத்தினை வலுப்படுத்த வேண்டும் என்பது இலக்காகவும், இம்மாநாட்டின் நோக்கமாகவும் இருக்கும். இந்த மாநாடானது உரைகள் மற்றும் விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நிரலாக்கப் போட்டி, கண்காட்சி ஆகிய அம்சங்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in