பாஜகவில் இணைந்த தமிழ்நாட்டு முன்னாள் எம்எல்ஏ-க்கள்!

இருவர் என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின்போது ஏற்கெனவே பாஜகவில் இணைந்துவிட்டார்கள்.
பாஜகவில் இணைந்த தமிழ்நாட்டு முன்னாள் எம்எல்ஏ-க்கள்!

தமிழ்நாட்டிலிருந்து 17 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி. தில்லியிலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று பாஜகவில் இணைந்தார்கள்.

பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்கள். 17 எம்எல்ஏ-க்களில் இருவர் என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின்போது ஏற்கெனவே பாஜகவில் இணைந்துவிட்டார்கள். பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்.பி.யை அண்ணாமலை அறிமுகம் செய்துவைத்தார்.

பாஜகவில் இணைந்தவர்களில் தங்கராஜு என்பவர் 1991-ல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானவர். குருநாதன் என்பவர் 1989-ல் திமுக சார்பாக பாளையங்கோட்டையில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குத் தேர்வானார். தமிழழகன் என்பவர் 2001-ல் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு தேமுதிக சார்பாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் அதிமுக மற்றும் திமுக சார்பாக போட்டியிட்டு மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வாகியிருக்கிறார். மற்ற அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

1980-ல் திமுக சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்வான குழந்தைவேலுவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in