தேர்தல் அறிக்கை: திமுக, அதிமுக இன்று முதல் சுற்றுப்பயணம்

மக்கள் கருத்தைக் கேட்டறிந்த பிறகே தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என திமுக, அதிமுக முடிவு
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி (கோப்புப்படம்)
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி (கோப்புப்படம்)ANI

திமுக, அதிமுகவில் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், மக்களிடம் கருத்துக் கேட்பதற்காக இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்வதற்கானக் குழுவை திமுக அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எம். அப்துல்லா, எழிலன் நாகநாதன், மேயர் பிரியா ஆகியோர் உள்ளார்கள்.

மக்கள் கருத்தைக் கேட்ட பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம் என திமுக அறிவித்துள்ளது. கருத்துகளைத் தெரிவிப்பதற்கான பேஸ்புக் பக்கம், வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை திமுக வெளியிட்டுள்ளது.

மேலும், மக்கள் கருத்தை நேரடியாகக் கேட்டறிய திமுகவின் இந்தக் குழுவானது இன்று முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தப் பயணத்தைத் தூத்துக்குடியிலிருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

இதேபோல அதிமுகவிலும் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக நத்தம் விசுவநாதன், சி. பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவும் மக்கள் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதிமுகவினுடைய இந்தக் குழுவும் மக்கள் கருத்துகளைக் கேட்க இன்று முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. இந்தக் குழுவானது பிப்ரவரி 10-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in