சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்: என்ஐஏ

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, சிவகங்கை, தென்காசி போன்ற இடங்களில்...
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI
1 min read

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, சிவகங்கை, தென்காசி போன்ற இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினார்கள். திருச்சியில் உள்ள சாட்டை முருகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இந்தச் சோதனை குறித்து என்ஐஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் 6 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள், 4 பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2022 மே மாதம் நடத்தபட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டார்கள். இதுதொடர்பான விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in