பிப். 19-ல் நிதிநிலை அறிக்கை தாக்கல்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இந்தக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்https://twitter.com/AppavuSpeaker

2024-25-ம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை பிப்ரவரி 12-ம் தேதிக்கு கூட்டியுள்ளார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இந்தக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து, பிப்ரவரி 20-ல் 2024-25-ம் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், பிப்ரவரி 21-ல் 2023-24-ம் நிதியாண்டுக்கான முன்பண செலவு மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in