ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: திமுக, அதிமுக, பாஜக பங்கேற்பு

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை தேநீர் விருந்தைப் புறக்கணித்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் ஆளும் தரப்பு, பாஜக மற்றும் அதிமுக சார்பாக பிரநிதிகள் கலந்துகொண்டார்கள். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதைப் புறக்கணித்தன. ஆளுங்கட்சியான திமுக பங்கேற்குமா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் அமைச்சர்கள் பங்கேற்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது நடைமுறை. இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. எனினும், திமுக பங்கேற்குமா என்பது இறுதி வரை உறுதிப்படுத்தப்படவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளை தொடர்ந்து திமுகவும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், ரகுபதி, அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., சார்பில் ஜெயகுமார் மற்றும் பாலகங்கா பங்கேற்றார்கள். பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன் பங்கேற்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in