மதுரை எய்ம்ஸ் குறித்து ஸ்டாலின் மறைமுக விமர்சனம்?

"திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை இந்த மதுரையில் ஏற்படுத்தியிருக்கிறோம்."
மதுரை எய்ம்ஸ் குறித்து ஸ்டாலின் மறைமுக விமர்சனம்?

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தைத் திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ. 62.78 கோடி செலவில் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இங்கு நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.

தொடக்க விழாவில் முதல்வர் பேசியதாவது:

"தமிழர் பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் நம்முடைய திமுக அரசால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதுவும், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற ஆண்டில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு!

திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக, கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை இந்த மதுரையில் ஏற்படுத்தியிருக்கிறோம்.

இதைச் சொல்லுகின்ற நேரத்தில் 2015-ல் அறிவித்து இன்று வரை மதுரைக்கு மத்திய அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறது. அது உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!"

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் இன்னும் அமையாததையே முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in