திமுக இளைஞர் அணி மாநாடு: நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்கள் என்ன?

"பாஜக ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்"
திமுக இளைஞர் அணி மாநாடு: நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்கள் என்ன?

இந்துக்களின் உண்மையான எதிரி பாஜகதான் என்பதை அம்பலப்படுத்துவோம் என்பது உள்பட 25 தீர்மானங்கள் திமுக இளைஞர் அணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் காலை தொடங்கியது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில் இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.

இந்த இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிநதார். இளைஞரணி மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி கூறுகிற தீர்மானம் முதல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிஸ்டுகளை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பிட உறுதியேற்கும் தீர்மானம் வரை ஒவ்வொரு தீர்மானமும் மாநில உரிமை மீட்பு பிரகடனமாக அமைந்துள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த 25 தீர்மானங்களும் இளைஞரணி மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்கள்:

  1. இளைஞர் அணியின் மாநில மாநாட்டுக்கு அனுமதியளித்த திமுக தலைவருக்கு இளைஞர் அணி சார்பாக நன்றி

  2. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதல்வருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்

  3. மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விடியல் பயணத் திட்டத்துக்கு நன்றி

  4. குடும்பத் தலைவியரின் உழைப்பை மதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காகவும், இதைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பை இளைஞர் அணியின் செயலாளரிடம் ஒப்படைத்ததற்காக முதல்வருக்கு நன்றி

  5. மாணவர்களின் உடல்நலன் காத்து ஊக்கமளிக்கும் காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வருக்கு நன்றி

  6. நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டங்களுக்காக முதல்வருக்கு நன்றி

  7. மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் திட்டங்களுக்காக முதல்வருக்கு நன்றி

  8. நிதி நெருக்கடியிலும் மகிழ்ச்சிப் பொங்க வைத்த பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்த முதல்வருக்குப் பாராட்டு

  9. வரலாறு காணாத மழையிலும் மக்களைக் காத்த முதல்வருக்கு நன்றி

  10. கலைஞர் ஊட்டிய மொழி-இன உணர்வுடன் அவரது லட்சிய வழியில் இளைஞர் அணி தன் பயணத்தைத் தொடரும் என உறுதியினை வழங்குகிறது

  11. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக்கிய முதல்வருக்கு நன்றி

  12. இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றி வரும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் - இளைஞர் அணிச் செயலாளரின் முயற்சிகளுக்கு பாராட்டு.

  13. உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது

  14. குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்

  15. மாநிலப் பட்டியலுக்குக் கல்வி - மருத்துவத்தை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான சட்ட வழிமுறைகளை இளைஞர் அணி முன்னெடுக்கும்

  16. முதல்வரே பல்கலைக்கழக வேந்தராகச் செயல்படுவார் என்கிற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிப்பதுடன், அதனை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தப்படுகிறது

  17. ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றுவதே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு

  18. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திட வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது

  19. மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்

  20. கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வலிமைப்படுத்திட வேண்டும்

  21. அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய ஒன்றிய பாஜக அரசுக்குக் கண்டனம்

  22. நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்

  23. இந்துக்களின் உண்மையான எதிரி பாஜகதான் என்பதை அம்பலப்படுத்துவோம்

  24. பாஜக ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்

  25. நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கான சூளுரை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in