டி.ஆர். பாலு, கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் குழுக்கள்: துரைமுருகன்

கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக் குழு, தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய தேர்தல் குழுக்களை திமுக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான குழுவை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எம். அப்துல்லா, எழிலன் நாகநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவையும் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். டி.ஆர். பாலு தலைமையிலான இந்தக் குழுவில் கே.என். நேரு, இ. பெரியசாமி, க. பொன்முடி, ஆ. ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இதுதவிர தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான குழுவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கூட்டணிப் பேச்சுவார்த்தையை திமுக தொடங்கும் என ஜனவரி முதல் வாரத்தில் செய்திகள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் வகையில் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவை இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in