752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி நிறைவு

40 நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள்...
நிறைவு விழாவில்...
நிறைவு விழாவில்...படம் - twitter.com/Anbil_Mahesh

சென்னையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற சர்வதேசப் புத்தகக் காட்சி நிறைவு பெற்றுள்ளது.

ஜனவரி 16 முதல் 18 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தன் கல்வி அமைச்சகம் மூலம் பொது நூலகத் துறை இயக்குநரகம் - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் மூலம் இப்புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. நாடுகளில் இருந்து பதிப்பாளர்களும் இலக்கிய முகவர்களும் பங்கேற்றார்கள். கெளரவப் பங்கேற்பு நாடாக மலேசியா பங்கேற்றது. சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

இந்தப் புத்தகக் காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பதிப்பாளர்களுடன் வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் தங்கள் நூல்களின் பதிப்புரிமையை வாங்கவும் விற்கவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்கள். முதல் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியில் 30-க்கும் மேற்பட்ட நூல்கள் சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

இந்நிலையில் 2-வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சி நிறைவடைந்ததையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ட்விட்டரில் கூறியதாவது:

மூன்று நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் நூல்களை மொழிபெயர்ப்பு செய்திட 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தமிழ் இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் உலகின் மற்ற இலக்கியங்களோடு உரையாட வைக்கும் #CIBF2024 விழாவுக்குத் துணையாக நின்ற எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in