அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 5 சுற்றுகள் முடிவில் 39 பேர் காயம்

இதுவரை மொத்தம் 363 காளைகள் களம் கண்டுள்ளன. 250 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 5 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியைத் தொடக்கிவைத்தார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 1,200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

சற்று முன்பு வரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 5 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இந்த சுற்றின் முடிவில் சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தர் மற்றும் என். குன்னத்தூரைச் சேர்ந்த திவாகர் ஆகியோர் தலா 11 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்கள். பாலமுருகன், தமிழரசன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளார்கள். இதுவரை மொத்தம் 363 காளைகள் களம் கண்டுள்ளன. 250 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்த சுற்றின் முடிவில் 3 காவலர்கள் உள்பட மொத்தம் 39 பேர் காயமடைந்துள்ளார்கள். 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். 6-வது சுற்றில் 50 வீரர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

இதேபோல சிவகங்கை மாவட்டம் சிராவயலில் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in