சென்னையிலிருந்து வெளியூர் செல்கிறீர்களா?: சிறப்புப் பேருந்துகளுக்கான வழிகாட்டி இதோ!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்படம்: எக்ஸ் தளம் | CMDA

சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்கு வசதியாக எந்த ஊர் செல்ல, எந்த ஊர் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான பேருந்து நிலைய வழிகாட்டி வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சென்னையிலிருந்து வெளியூர் செல்லத் தொடங்கியுள்ளார்கள். மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கு ஒவ்வொரு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிதாகக் கிளாம்பாக்கத்திலும் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வெளியூர் எந்தப் பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக எந்த ஊர் செல்ல எந்த பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற வழிகாட்டி வெளியாகியுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து புறப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் (SETC):

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம்.

தாம்பரம் சானடோரியத்திலிருந்து புறப்படும் தொலைதூர அரசுப் பேருந்துகள்:

கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி (வழி: விக்கிரவாண்டி)

தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி பேருந்து நிறுத்தம்:

காஞ்சிபுரம், வேலூர், ஆரணி (வழி: ஒரகடம்)

கேகே நகர் மாநகரப் பேருந்து நிலையம்:

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் (வழி: ஈசிஆர்)

பூந்தமல்லி மாநகரப் பேருந்து நிலையம் (புறவழிச்சாலை):

ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தருமபுரி

மாதவரம் பேருந்து நிலையம்:

திருப்பதி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் (வழி: செங்குன்றம்)

கோயம்பேட்டிலிருந்து புறப்படும் தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (TNSTC):

திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி (திண்டிவனம்), பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாசலம், திட்டக்குடி, செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, சேலம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்ல வேண்டும். மற்ற அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்திருப்பவர்கள், முன்பதிவு செய்யாதவர்கள் கிளாம்பாக்கம் செல்லக் கூடாது. இந்தப் பேருந்துகள் எதுவும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படவில்லை. இவர்களுக்கான பேருந்துகள் மற்ற 5 பேருந்துகளில் மட்டுமே இயக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in