உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

பிகார் அரசுப் பள்ளிகளின் மோசமான நிலை: அரசிடம் பதில் கோரிய உச்ச நீதிமன்றம்

கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் அடிப்படை வசதிகளைப் பின்பற்றாமல் பிகார் அரசு மீறியிருப்பதாகத் தெரிவித்தார்.

பிகார் அரசுப் பள்ளிகளின் மோசமான நிலையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்குமாறு பிகார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிகாரில் 72663 அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு மொத்தம் 3 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருப்பதாக வழக்கறிஞர் அசோக் அகர்வால், தான் நடத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவரது மனுவை பாட்னா உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் அசோக் அகர்வால் தனது மனுவில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் அடிப்படை வசதிகளைப் பின்பற்றாமல் பிகார் அரசு மீறியிருப்பதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிகார் அரசுப் பள்ளிகளின் மோசமான நிலையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்குமாறு பிகார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in