மத்திய அமைச்சர் தலையீடு: பிளே ஸ்டோரில் மீண்டும் கூகுள் ஆப்கள்!

சேவைக் கட்டணம் செலுத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து சில ஆப்களை நீக்குவதாக அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவின் தலையீட்டைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் அனைத்து ஆப்களையும் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

சேவைக் கட்டணம் செலுத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து சில ஆப்களை நீக்குவதாக அறிவித்தது. இதை சரி செய்யும் வகையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தார்.

இவரது தலையீட்டுக்குப் பிறகு, கூகுள் நிறுவனம் அனைத்து ஆப்களையும், பயன்பாட்டுக்காக மீண்டும் பிளே ஸ்டோருக்கு கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கூகுள் நிறுவனத்துடன் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பானது திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in