இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 101 தொல்பொருள்கள்

இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 101 தொல்பொருள்கள்

இந்த 101 தொல்பொருட்களில், சில கோவாவில் உள்ள தேசிய சுங்க அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

இந்திய தொல்லியல் துறையிடம் மொத்தம் 101 தொல்பொருட்களைக் காட்சிப்படுத்துதல் மற்றும் சிறப்புப் பராமரிப்புக்காக சுங்கத் துறை ஒப்படைத்துள்ளது. இந்த 101 தொல்பொருட்களில், சில கோவாவில் உள்ள தேசிய சுங்க அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் அதிகாரிகளின் எச்சரிக்கை நடவடிக்கையின் விளைவாகப் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து குத்துவாள் மற்றும் ஒரு கத்தி உள்ளிட்ட வரலாற்றுப் பொக்கிஷங்களின் தொகுப்பை மும்பை சுங்கத் துறை, இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது.

இந்தியாவிலிருந்து பிரான்சுக்குத் தபால் ஏற்றுமதி மூலம் கலைப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சில குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. விழிப்புணர்வுடன் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக ஐந்து குத்துவாள்கள் 2003-ல் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து குத்துவாள்களும் இடைக்காலத்தைச் சேர்ந்தவை.

சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொல்பொருள்களை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இணையம் வாயிலாகத் தலைமை தாங்கினார். பெங்களூரு, போபால், புவனேஸ்வர், தில்லி, கெளஹாத்தி, மும்பை மற்றும் புனே ஆகிய ஏழு வெவ்வேறு இடங்களில் இந்த ஒப்படைப்பு விழா நடைபெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in