மோடி - பில் கேட்ஸ் சந்திப்பு
மோடி - பில் கேட்ஸ் சந்திப்பு@narendramodi

பிரதமர் மோடி - பில் கேட்ஸ் சந்திப்பு!

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெண்கள் வளர்ச்சி, விவசாயம் குறித்து மோடியுடன் பில் கேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Published on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர் பில் கேட்ஸ். இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ், பிரதமர் மோடியை வியாழன் அன்று சந்தித்தார்.

இச்சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெண்கள் வளர்ச்சி, விவசாயம் குறித்து மோடியுடன் பில் கேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து பில் கேட்ஸ் தனது X தளத்தில் கூறியதாவது:

“நரேந்திர மோடியைச் சந்திப்பது எப்போதும் ஊக்கமளிக்கிறது. பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெண்கள் வளர்ச்சி, விவசாயம், சுகாதாரம், இந்தியாவிடமிருந்து நாம் எவ்வாறு பாடங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதைப் பற்றி நிறைய பேசினோம்” என்றார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் பில்கேட்ஸைச் சந்தித்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in