பாஜக வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை விரைவில் வெளியிட வாய்ப்பு

பாஜக வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை விரைவில் வெளியிட வாய்ப்பு

இரவு நடந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 155 இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Published on

மத்திய தேர்தல் கமிட்டியின் மராத்தான் கூட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் முடிவடைந்த பின்னர், பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைப்பின் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், இணைப் பொறுப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அசாம், உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இரவு நடந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 155 இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Kizhakku News
kizhakkunews.in