ஒடிஷாவில் மேம்படுத்தப்படும் கிரிக்கெட் மைதானங்கள்: முதல்வர் அறிவிப்பு

ஒடிஷாவில் மேம்படுத்தப்படும் கிரிக்கெட் மைதானங்கள்: முதல்வர் அறிவிப்பு

ஒடிஷாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான முக்கியத் திட்டங்களை முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்

ஒடிஷாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க பராபதி கிரிக்கெட் மைதானத்தை மறுவடிவமைப்பு செய்வதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும், சம்பல்பூரில் உள்ள வி.எஸ்.எஸ். கிரிக்கெட் மைதானத்தின் மறுவடிவமைப்புக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பி.சி.சி.ஐ., ஒடிஷா கிரிக்கெட் சங்கம் (ஓசிஏ) மற்றும் சில நிறுவனங்களும் இணைந்து, பராபதி மைதானம் அனைத்து நவீன வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு கிரிக்கெட் மைதானமாக மீண்டும் உருவாக்கப்படும் என்று நவீன் பட்நாயக் கூறினார். சம்பல்பூரில் உள்ள வி.எஸ்.எஸ். மைதானம் பிராந்தியத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான சிறந்த கிரிக்கெட் வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்றார்.

மாநில அரசு மற்றும் ஓசிஏ கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதினால், வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் இருந்து சாம்பியன்கள் உருவாக இது ஒரு நல்ல சூழலை உருவாக்க உதவும். இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக ஒடிஷா அரசு விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும், நாட்டில் விளையாட்டுக்கான முக்கிய இடமாக ஒடிஷா அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் நவீன் பட்நாயக் மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in