இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு இந்திய மீனவர்கள்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டார்கள்.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு இந்திய மீனவர்கள்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில், ஆறு மீனவர்கள் நாடு திரும்பியதை உறுதி செய்துள்ளது. இன்று அதிகாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.


தாங்கள் பாதுகாப்பாகத் திரும்பியதற்கு மீனவர்கள் நன்றி கூறியதோடு, தங்கள் விடுதலைக்கு வழி செய்ததற்காக இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் செயல்படும் மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தச் சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பிப்ரவரி 5 அன்று, ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது நீண்டகால குறைகள் மீதான கவனத்தை ஈர்க்கும் நோக்கில் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தி, தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதற்குத் தொடர்ச்சியான கோரிக்கைகளைக் கோடிட்டுக் காட்டினர். மீனவர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை மத்திய அரசிடம் திருப்பித் தரப்போவதாகவும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இப்பகுதியில் மீனவச் சமூகத்தின் உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்ததோடு, பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இந்தப் பிரச்னையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in