இந்தியாவில் 2036 ஒலிம்பிக்ஸ்: அனுராக் தாக்குர் நம்பிக்கை

உலகின் 'உள்ளடக்க கண்டமாக' இந்தியா இருக்கும்: WITT உலக உச்சி மாநாடு 2024இல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக்ஸ்: அனுராக் தாக்குர் நம்பிக்கை

இந்தியாவில் 2036 ஒலிம்பிக்ஸ் நடைபெற வாய்ப்புள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 25 அன்று தில்லியில் நடைபெற்ற TV9 வாட் இந்தியா திங்க்ஸ் டுடே (WITT) உலக உச்சி மாநாட்டின் முதல் நாளில், TV9 நெட்வொர்க் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பருண் தாஸுடனான உரையாடலில், "அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா உலகின் உள்ளடக்க மையமாக மாறும். உலகின் 'உள்ளடக்கக் கண்டமாக' இருக்கும்" என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் சாதனைகளை மத்திய அமைச்சர் பாராட்டினார். மேலும், நம் நாடு 2036-ம் ஆண்டில் முதல் 10 விளையாட்டு நாடுகளில் ஒன்றாகவும், 2047-ல் முதல் 5 இடங்களில் ஒன்றாகவும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"கடந்த முறை (2020 டோக்கியோவில்) ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பார்க்க அதிக மக்கள் திரளைக் கொண்டிருந்தோம். இந்த முறை சர்வதேச ஒலிம்பிக் குழுவானது 2036 ஒலிம்பிக்ஸை இந்தியாவுக்குத் தந்தால் மட்டுமே அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in