கியான்வாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதை எதிர்த்த மனு தள்ளுபடி

வாரணாசியில் கியான்வாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதை எதிர்த்த மனுவை அலஹாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கியான்வாபி மசூதி
கியான்வாபி மசூதி

வாரணாசியில் கியான்வாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதை எதிர்த்த மனுவை அலஹாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உத்தரப் பிரதேசம் - வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலின் அருகே கியான்வாபி மசூதி உள்ளது. மசூதியை ஒட்டி, கோயிலின் சிறிய மண்டபம் (வியாஸ் மண்டபம்) அமைந்துள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வியாஸ் மண்டபத்தில் 1993-ல் நிறுத்தப்பட்ட பூஜையை மீண்டும் தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. தினமும் 5 வேளை பூஜைக்கான ஏற்பாடுகள் கடந்த பிப்ரவரியில் தொடங்கின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இதனால் மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இன்தசாமியா மசூதி அறக்கட்டளை, பிப்.1-ல் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்தத் தீர்ப்பை நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் தலைமையிலான அமர்வு பிறப்பித்தது. "முஸ்லிம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பலவீனமாக உள்ளது. பூஜையைத் தொடர அனுமதித்த மாவட்ட நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. முதல் மேல்முறையீட்டு மனு உத்தரவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது நமது சனாதன தர்மத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அவர்கள் (முஸ்லிம் தரப்பு) முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரலாம். பூஜை தொடரும்” என்று வழக்கறிஞர் பிரபாஷ் பாண்டே தெரிவித்தார்.

இந்து தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், "இன்று, அலஹாபாத் உயர் நீதிமன்றம், அஞ்சுமன் இன்தசாமியாவின் உத்தரவுகளிலிருந்து முதல் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்துள்ளது, அஞ்சுமன் இன்தசாமியா உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால், நாங்கள் எங்கள் கேவியட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்..."

மாவட்ட நீதிபதியின் இரு உத்தரவுகளை எதிர்த்து மசூதி குழு தாக்கல் செய்த மேல்முறையீடுகளை நீதிமன்றம் விசாரித்தது. மாவட்ட நீதிபதி மனுவை மூன்று முறை விசாரித்ததாகவும், மசூதி தரப்பு அப்போது எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் கோயில் தரப்பில் கூறினர்.

மாவட்ட நீதிபதி எந்த புதிய உரிமைகளையும் வழங்கவில்லை என்றும், சட்ட நடைமுறைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் கூறியது. வழிபாட்டு உரிமைக்காகத் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கில் உரிமையைத் தீர்மானிக்காமல் வழிபாட்டுக்கு அனுமதி வழங்குவது சட்ட நடைமுறையை மீறும் செயல் என்று மசூதித் தரப்பு வாதிட்டது. மாவட்ட நீதிபதி இரு முரண்பாடான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in