பஞ்சாபில் கூட்டணி இல்லை: அரவிந்த் கேஜ்ரிவால்

தில்லியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே தொகுதி பங்கீடு முன்னதாகவே நடந்திருக்க வேண்டும். தாமதாமாகிவிட்டது
அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்ANI

கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, தில்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை தொடர்வதாக தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நிலவரங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். தில்லியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே தில்லியில் தொகுதி பங்கீடு முன்னதாகவே நடந்திருக்க வேண்டும். தாமதாமாகிவிட்டது என்பது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

"அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இது மிகவும் தாமதமானது, இது முன்னதாகவே நடந்திருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டவர், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றார். முகுல் வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினருடன் ஆம் ஆத்மி நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

"பஞ்சாபில், காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளன. இதில் எந்த மாற்றமும் இல்லை. தில்லியைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை தொடர்கிறது. கூட்டணி இல்லாவிட்டாலும் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in