தில்லியை நோக்கி நாளை முதல் பேரணி: விவசாய சங்கங்கள்

"அரசு கொண்டுவந்துள்ள முன்மொழிவை ஆராய்ந்தால், அதில் ஒன்றுமே இல்லை என்பது தெரியவரும்."
விவசாய சங்கத் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு (கோப்புப்படம்)
விவசாய சங்கத் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு (கோப்புப்படம்)ANI

தில்லியை நோக்கி நாளை முதல் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிர்களை வாங்குவதற்கான முன்மொழிவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் தங்ககளுக்கு சாதகமாக எதுவுமில்லை எனக் கூறி விவசாயிகள் திங்கள்கிழமை மாலை நிராகரித்தார்கள். விவசாய சங்கள் ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

"அரசு கொண்டுவந்துள்ள முன்மொழிவை ஆராய்ந்தால், அதில் ஒன்றுமே இல்லை என்பது தெரியவரும். நமது அரசு 1.75 கோடி மதிப்புள்ள பாமாயிலை வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறது. பொதுமக்களுக்கு இது கேடு விளைவிக்கிறது. இந்தத் தொகையை எண்ணெய் விதைப் பயிர்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் நம் நாட்டு விவசாயிகளுக்குக் கொடுத்தால் அந்தப் பணம் இங்கு பயனைக் கொடுக்கும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள முன்மொழிவு விவசாயிகளுக்கு சாதகமானதாக இல்லை. நாங்கள் அதை நிராகரிக்கிறோம்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்காவிட்டால், இந்த நாட்டு விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள் என்று அர்த்தம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் ஜக்ஜித் சிங்.

இதைத் தொடர்ந்து, நாளை முதல் தில்லியை நோக்கி பேரணி மேற்கொள்ளவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் கூறியதாவது:

"எந்தக் காரணத்தைக் கொண்டும் எங்களை தில்லிக்குள் அனுமதிக்கக் கூடாது என்கிற அரசின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியவில்லையெனில், தில்லியை நோக்கிய எங்களுடைய பேரணியை அனுமதிக்க வேண்டும்.

தில்லியை நோக்கிச் சென்றால், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படுகின்றன. குண்டுகள் மூலம் டிராக்டர்களின் டயர்களில் குண்டுகள் வீசப்படுகின்றன. விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படவில்லை என ஹரியாணா டிஜிபி தெரிவிக்கிறார். இதைப் பயன்படுத்துவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். தவறான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. காஷ்மீரில் உள்ள நிலை போல் ஹரியாணா இருக்கிறது. பிப்ரவரி 21-ம் தேதி நாங்கள் தில்லியை நோக்கி பேரணி மேற்கொள்வோம். நாங்கள் எங்களுடைய உண்மையான கோரிக்கைகளிலிருந்து பின்வாங்குவோம் என அரசு ஒரு முன்மொழிவைக் கொடுத்திருக்கிறது. இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பு" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in