இறுதிக் கட்டத்தில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை: காங்கிரஸ் பொதுச்செயலாளர்

"எந்த நேரத்திலும் கூட்டணி இறுதி செய்யப்படலாம்."
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)ANI

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை இறுதியான பிறகு ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பேன் என சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வேணுகோபால் எந்த நேரத்திலும் கூட்டணி இறுதி செய்யப்படலாம் எனத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

"தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது. எந்த நேரத்திலும் இறுதி செய்யப்படலாம். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர் ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழு தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் நல்ல நிலையில் இயங்கி வருகிறோம். விரைவில் தீர்வு எட்டப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in