தில்லி சட்டப்பேரவை: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய தில்லி முதல்வர் கெஜ்ரிவால்

இந்தத் தீர்மானத்தின் மீது சனிக்கிழமையன்று விவாதம் நடைபெறவுள்ளது.
தில்லி சட்டப்பேரவை: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய தில்லி முதல்வர் கெஜ்ரிவால்
ANI

தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

தில்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் 62 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையான அரசாக உள்ளது ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு. தேர்தலில் பாஜக 8 தொகுதிகளை வென்றது. எனினும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்க முயல்வதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். தில்லியின் 2021 மதுபானக் கொள்கை வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத்துறை ஐந்து முறை சம்மன் அளித்தும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் நாளை (சனிக்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார் கெஜ்ரிவால்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நாடு விரைவில் எதிர்கொள்ளும் சூழலில் புதிய அறிவிப்பை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கெஜ்ரிவால்.

இன்று தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தில் தன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானத்தின் மீது சனிக்கிழமையன்று விவாதம் நடைபெறவுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை முன்வைக்கிறேன். எங்களுடைய ஏழு எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் அழைத்துப் பேசியுள்ளார்கள். ஊழல் குற்றச்சாட்டின் மூலம் கட்சியை உடைக்க எண்ணுகிறார்கள் என்று ,சட்டமன்றத்தில் கெஜ்ரிவால் பேசினார். அமலாக்கத்துறை தன்னைக் கைது செய்ததால் அதனால் கட்சியில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோரியுள்ளார் கெஜ்ரிவால்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in