விவசாயிகள் பேரணி: ஹரியாணா எல்லையில் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

தில்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் நொய்டாவிலிருந்து தில்லி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விவசாயிகள் பேரணி: ஹரியாணா எல்லையில் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு
ANI

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டு வீசி, விவசாயிகளைக் கலைத்து வருகிறார்கள்.

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஆகிய விவசாய சங்கங்கள் தில்லியை நோக்கி இன்று பேரணி மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தில்லி எல்லைகளில் தடுப்புகள் வைத்து காவல் துறையினர் தயார் நிலையில் இருந்தார்கள்.

தில்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் நொய்டாவிலிருந்து தில்லி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லியை முற்றுகையிடுவதற்காகப் புறப்பட்ட விவசாயிகள் மீது பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டு வீசினார்கள். மேலும், ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டு வீசி காவலர்கள் விவசாயிகளைக் கலைத்தார்கள்.

விவசாயிகளின் தில்லி நோக்கிய பேரணி குறித்து ஹரியாணாவின் அம்பாலா ரேஞ்ச் ஐஜி சிபாஷ் கபிராஜ் கூறுகையில், "பஞ்சாபிலிருந்து வரும் விவசாயிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் டிராக்டர்களில் வந்தால், மக்களுக்கு பிரச்னைகள் உண்டாகும். பேருந்துகள், ரயில்கள் அல்லது நடந்துகூட விவசாயிகள் வரலாம். டிராக்டர்களில் வந்தால் விவசாயிகளை அனுமதிக்க மாட்டோம். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in