பாஜகவில் இணைந்த அசோக் சவான்

பாஜகவில் இணைந்த அசோக் சவான்
1 min read

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர், அடிப்படை உறுப்பினர், எம்எல்ஏ பதவிகளை திங்கள்கிழமை ராஜினாமா செய்த நிலையில், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இணைந்தது குறித்து அசோக் சவான் கூறுகையில், "என்னுடைய அரசியல் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளேன். முறைப்படி பாஜக அலுவலகத்துக்கு வந்து கட்சியில் இணைகிறேன். மகாராஷ்டிரத்தில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவோம்" என்றார். மேலும், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மகாராஷ்டிர மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே உள்ளிட்டோர் முன்னிலையில் கட்சியில் இணைவேண்" என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக இணைவது குறித்து அசோக் சவானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மற்றவர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் பதிலளித்தார்.

காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அசோக் சவான் மகாராஷ்டிரத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வாகலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Kizhakku News
kizhakkunews.in