மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசைக் கண்டித்த அன்புமணி ராமதாஸ்

புதிய அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் காவிரி நீர் ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு...
கோப்புப் படம்
கோப்புப் படம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடந்த வாக்குவாதம் குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரி விஷயத்தில் கர்நாடக அரசால் எதையும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரிப் படுகையில் எதுவும் கட்ட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆணையக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசின் பிரநிதிகள் கலந்து கொண்டனர். புதிய அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் இது குறித்து விவாதிக்கக்கூடாது என்று தமிழக அரசு அதிகாரிகள் தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். மேகதாது அணை கட்டப்படுவது குறித்து அவசியம் விவாதிக்கவேண்டும் என்று கர்நாடக அரசுப் பிரநிதிகள் தெரிவித்ததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் நீர்வளத்துறைக்கு திருப்பி அனுப்ப காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. முன்னதாக இது குறித்து ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்பது கர்நாடக அரசின் கோரிக்கை. விவாதிப்பதற்கு ஆணையமும் ஒப்புக்கொண்டு நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்திருந்தது.

நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தால் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் இருப்பதால் மேலாண்மை ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று குறிப்பிட்டு தமிழ் நாடு அரசுப் பிரநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்வரை மேகதாது அணை விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in