நிதிப் பற்றாக்குறை 5.1% ஆக இருக்கும்: நிர்மலா சீதாராமன்

2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவிகிதமாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை 5.1% ஆக இருக்கும்: நிர்மலா சீதாராமன்

2024-25-ம் நிதியாண்டுக்கான ஜிடிபியில் 5.4 சதவிகிதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் வரி விகிதம் மற்றும் நிதிப் பற்றாக்குறை குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 5.4 சதவிகிதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை, ஜிடிபி-யில் 5.9 சதவிகிதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால், கடந்த நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 5.8 சதவிகிதமாகத் திருத்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை ஜிடிபி-யில் 4.5 சதவிகிதமாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், நேரடி மற்றும் மறைமுக வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in